புதையல்

புதையல் என்ற வார்த்தையை நாம் கேட்கும்போதே, எங்கே, எங்கே ?

என்றுதான் நம் மனம் அலைபாயும்

எங்கே இருக்கிறது புதையல் ?

நாம் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்.

நாம் ரூ 10,000/- என்ற முதலீட்டை 12% வருமானம் வரும்படி 30 வருடம் பராமரித்தால் அந்த பணம் ரூ 2.97/- லட்சமாக மாறும்.

இப்போது கேள்வி என்னவென்றால்...

அதே ரூ10,000/- முதலீட்டை 24% வருமானம் வரும்படி 30 வருடம் பராமரித்தால் அந்த பணம் எவ்வளவாக மாறும் ?

என்ன தோணுது ?

6 லட்சம்

10 லட்சம்

20 லட்சம்

நண்பர்களே அந்த ரூ 10,000/- மானது முப்பது வருடங்கள் கழித்து ரூ 63,50,000/- மாக மாறும்.

என்ன... ஏதாவது மந்திரம் இருக்கிறதா ?

இல்லை, இதைதான் கூட்டு வட்டியின் மகத்துவம் என்போம்.

பங்குசந்தை நமக்கு அடுத்த சில பல வருடங்களுக்கு 24% என்ற அளவிற்கு வருமானம் தர வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் பொருளாதாரம் வலிமைதான்.

எனவே புதையல் நம்மிடம்தான் உள்ளது.

தோண்ட ஆரம்பிப்போமா !

Enquiry