பயிற்ச்சி வகுப்புகள்
பள்ளி பருவத்திலிருந்து, கல்லூரி வாழ்க்கை
மற்றும் நம் அலுவலங்கள் வரை தேவைக்கு ஏற்ப தொடர்ந்து பயிற்ச்சிகள்
அளிக்கப்படுகிறது. அப்படிபட்ட பயிற்சிகள் மூலமே நாம் திறம்பட செயல்பட
முடிகிறது.
நாம் ஏதாவது ஒரு தொழில் செய்வதாக இருந்தாலும் கூட
அதற்குண்டான அனுபவத்தை பெற்ற பிறகே அதில் நாம் ஈடுபட ஆரம்பிக்கிறோம்.
எதை பற்றி தெரிந்து கொள்வதாக இருந்தாலும், அதற்குரிய சரியான பயிற்ச்சியை
மேற்கொள்கிறோம்.
பங்கு சந்தையில் ஒரு முதலீட்டளாரகவோ அல்லது ஒரு
வியாபாரியாகவோ, நம்மை நாம் தயார் செய்து கொண்டால் மட்டுமே அத்துறையில்
நாம் வெற்றி பெறமுடியும்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
யாரெல்லாம் திட்டமிடுவதற்கு தவறுகிறார்களோ, அவர்கள் எல்லாம் தவறுவதற்கு
திட்டமிடுகிறார்கள் என்பதுதான்.
ஏன்.... வெற்றி பெறுவதற்கு
திட்டமிடக்கூடாது.
திட்டமிடுவோம்
வாழ்த்துக்கள்
தி. ரா. அருள்ராஜன்