பங்கு சந்தை

பங்கு சந்தையும் மற்ற சந்தைகள் போல்தான். எப்படி காய்கறி சந்தைகள், தானிய சந்தைகள் இயங்குகின்றனவோ, அதைப்போல்தான் பங்கு சந்தையும் இயங்குகின்றது.

சந்தை என்றாலே வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் வசதி பண்ணிக் கொடுக்கும் இடம்தானே. அந்த வகையில் பங்குசந்தையும் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் வசதி பண்ணிக் கொடுக்கும் இடம் தான். எல்லா சந்தைக்கும் இடைதரகர்களும், கண்காணிப்பாளர்களும் உண்டு.

பங்கு சந்தையின் ஒழுங்கு முறை ஆணையகம் செபி (செக்யூரிடிஸ் எக்ஸ்சேஞ் ஆஃப் இந்தியா) என்று அழைக்கப்படும் பங்கு சந்தையை ஸ்டாக் எக்ஸ்சேஞ் என்று அழைக்கிறோம். இந்த பங்கு கொள்பவர்களை பங்கு தரகர்கள் என்று அழைக்கிறோம்.

இந்த பங்குதரகர்கள்தான், வாடிக்கையாளர்களை கொண்டு வருவது, அவர்களுக்கு சேவை செய்வதையும் தொழிலாக கொண்டுள்ளனர். எனவே பங்கு வாங்குவதற்கும், பணத்தை பட்டுவாடா செய்வதற்கும் பங்குசந்தை தரகர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள்.

நாம் பங்கு சந்தையில் ஈடுபட வேண்டுமானால் இரண்டுவகையான கணக்குகளை துவக்க வேண்டும்

1. வர்த்தக கணக்கு (Trading Account)
2. மின்னணு பங்கு கணக்கு (Demat Account)

இந்த கணக்குகளை துவக்குவதற்கு தேவையான ஆவணங்கள்

1. பேன் கார்டு (Pan card)
2. விலாச சான்றிதழ் (ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிம அட்டை, பாஸ்போர்ட்)
3. வங்கி கணக்கு (பாஸ்புக் அல்லது கடைசி சில கணக்கு படிவம்)
4. இரண்டு புகைப்படங்கள்

இவை இருந்தால் நீங்கள் கணக்கு துவக்க தயார். மேலும் ஏதேனும் உதவி வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

பிறகு ஒரு முதலீட்டளாரகவோ அல்லது வியாபாரியாகவோ அல்லது இரண்டு சேர்ந்தோ செயல்பட்டு வெற்றியடைவது உங்கள் சமார்த்தியம்.

நினைவிருக்கட்டும், உங்களை தகுதி படுத்திக் கொண்டு மட்டுமே சந்தையில் இறங்குங்கள்.

வாழ்த்துக்கள்.

தொடர்புக்கு :
T. R. ARULRAJHAN
trahits@gmail.com

Enquiry