என்னை பற்றி

பங்கு சந்தை என்பது, செல்வந்தர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் என்ற மாயை நம்மிடம் உள்ளது. பங்கு சந்தையில் நான் ஈடுபட்டுள்ள இந்த 20 வருடங்களில் அவை வெறும் மாயை என்பதை புரிந்து கொண்டேன்.

எனவே, பங்கு சந்தையை பற்றிய புதிர்களை உடைத்து, அதைபற்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே என்னுடைய ஆவல். அதற்காகவே அதைபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்களையும் பயன்படுத்தி வருகிறேன்.

அவற்றில் சில

* இலவச பங்கு சந்தை கருத்தரங்கம்
* பயிற்ச்சி வகுப்புகள்
* தொலைகாட்சிகள் மூலம் விழிப்புணர்வு
* பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவது
* பங்கு சந்தை சார்ந்த குறுந்தகடுகள்
* பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான மலர்
* பங்கு சந்தையில் வியாபாரம் செய்வதற்கான மலர்

என்று எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து வருகிறேன்.

பங்கு சந்தை என்பது பணவீக்கத்தை முறியடித்து, பணத்தை பெருக்குவதற்கான ஒரு சில வழிகளில் ஒன்று. அதே சமயம் அதை வியாபாரமாக எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

பங்கு சந்தையில் திட்டமிட்டு வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
தி. ரா. அருள்ராஜன்

Enquiry